Sri Paduka Sahasram - Paththati 8 - நிர்யாதனா பத்ததி (ச்லோகம் 215)
Paththati 8 - நிர்யாதனா பத்ததி
ஸர்வத: த்வத் அபிஷேக வாஸரே ஸம்யக் உத்த்ருத ஸமஸ்த கண்டகே ராகவஸ்ய விபிநேஷு பாதுகே யத்ர காமகமதா வ்யவஸ்திதா
பாதுகையே! உனக்கு எப்போது பட்டாபிஷேகம் செய்வித்தனரோ, அந்த நேரத்தில் இருந்து, அனைத்து இடங்களிலும் இருந்த விரோதிகள் அனைவரும் முள் போன்று நீக்கப்பட்டனர். அவர்கள் அளித்து வந்த துன்பங்களும் நீக்கப்பட்டன. இதனால்தான், நீ இல்லாவிட்டாலும், இராமன் கானகத்தில் தன் விருப்பப்படி எங்கும் சஞ்சாரம் செய்ய முடிந்தது (இதன் கருத்து – பாதுகை நாட்டை ஆண்ட காரணத்தால், நாட்டைப் பற்றிய கவலை இல்லாமல் இராமன் சென்றான்).