Sri Paduka Sahasram - Paththati 8 - நிர்யாதனா பத்ததி (ச்லோகம் 214)

Paththati 8 - நிர்யாதனா பத்ததி

தவ அபிஷேகாந் மணிபாதரக்ஷே மூலே நிஷேகாதிவ வ்ருத்தி யோக்யாத் ஜஹு: ததைவ த்ரிதசாங்கநாநாம் ப்ரம்லாநதாம் பத்ர லதாங்குராணி

இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! இலைகள் வளர்வதற்கு ஆதாரமாக வேரில் ஊற்றப்பட்ட நீர் உள்ளது. உன் மீது உனது பட்டாபிஷேகத்தின் போது சேர்க்கப்பட்ட நீர் எவ்விதம் உள்ளது என்றால் – அசுரர்களின் தொல்லை இன்றி தேவர்கள் தங்கள் தேவலோக மங்கையர் உடலில் எழுதும் சித்திர இலைகள் மீண்டும் தோன்ற வழி செய்தது.