Sri Paduka Sahasram - Paththati 8 - நிர்யாதனா பத்ததி (ச்லோகம் 213)
Paththati 8 - நிர்யாதனா பத்ததி
பாதாவநி ப்ரத்யயித: ஹநூமாந் ஸீதாம் இவ த்வாம் சிரவிப்ரயுக்தாம் ப்ரணம்ய பௌலஸ்த்ய ரிபோ: உதந்தம் விஜ்ஞாபயாமாஸ விநீதவேஷ:
பெரியபெருமாளின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! சீதையைப் போன்றே நீயும் இராமனை வெகுகாலம் பிரிந்திருந்தாய். இதனை உணர்ந்த இராமன் உன்னிடம் (பரதனிடம்) அனுமானை அனுப்பினான். இராமனின் நம்பிக்கைக்குப் பாத்திரமான அனுமான், உன்னிடம் வந்து சீதையைப் போன்றே உன்னை வணங்கி, இராவணனின் சத்ருவான இராமன் கூறியனுப்பியதைக் கூறினார்.