Sri Paduka Sahasram - Paththati 8 - நிர்யாதனா பத்ததி (ச்லோகம் 212)
Paththati 8 - நிர்யாதனா பத்ததி
உபாஸ்ய வர்ஷாணி சதுர் தச த்வாம் உத்தாரிகாம் உத்தர கோஸலஸ்தா: ஸநந்தநாத்யைரபி துர்விகாஹம் ஸாந்தாநிகம் லோகம் அவாபுர அக்ர்யம்
பாதுகையே! வடக்கு கோஸலை நாட்டில் உள்ள மக்கள் உன்னை பதினான்கு வருடங்கள் வணங்கி வந்தனர். இதனால் அவர்களுக்குக் கிட்டியது என்ன? ஸநந்தனர் போன்ற உயர்ந்தவர்களாலும் அடைய இயலாத ஸாந்தாநிக லோகத்தை அவர்கள் எளிதாக அடைந்தனர்.