Sri Paduka Sahasram - Paththati 8 - நிர்யாதனா பத்ததி (ச்லோகம் 211)
Paththati 8 - நிர்யாதனா பத்ததி
அபிஷேகோத்ஸவாத் தஸ்மாத் யஸ்யா நிர்யாதநா உத்ஸவ: அத்யரிச்யத தாம் வந்தே பவ்யாம் பரத தேவதாம்
அனைவராலும் போற்றுபடியாக பாதுகையின் பட்டாபிஷேகம் விளங்கியது. அந்த விழாவைக் காட்டிலும் இராமன் வனவாசம் முடிந்து அயோத்தி திரும்பியவுடன், இராமனிடம் பாதுகையை பரதன் மீண்டும் சமர்ப்பித்த விழா மிகவும் கோலாகலமாக இருந்தது. அப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாதனின் பாதுகையை நான் ஆராதிக்கிறேன்.