Sri Paduka Sahasram - Paththati 7 - அபிஷேக பத்ததி (ச்லோகம் 209)

Paththati 7 - அபிஷேக பத்ததி

அதர்வோபஜ்ஞம் தே விதிவத் அபிஷேகம் விதததாம் விஸிஷ்டாதீநாமபி உபசித சமத்கார பரயா த்வத் ஆஸ்தாந்யா ரங்கக்ஷிதி ரமண பாதாவநி ததா ஸகீயஸ்ய: ஜாதா ரகு பரிஷத் ஆஹோ புருஷிகா:

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! அதர்வ வேதத்தில் கூறப்பட்ட முறை தவறாமல் உனக்குப் பட்டாபிஷேகம் செய்யப்பட்டது. அந்த நேரத்தில் வசிஷ்டர் போன்றவர்கள் பெரும் வியப்பு அடைந்தனர். என்ன காரணம் ? உன் மீது அந்த நாட்டினர் வைத்த பத்தியே காரணம் ஆகும். இதனால் நேர்ந்தது என்ன? தங்களுக்கு மட்டுமே இத்தகைய மரியாதையை மக்கள் செய்து வந்தனர் என்று கர்வம் கொண்டிருந்த ரகு வம்சத்து அரசர்களின் இறுமாப்பு ஒடுங்கி விட்டது.