Sri Paduka Sahasram - Paththati 7 - அபிஷேக பத்ததி (ச்லோகம் 208)

Paththati 7 - அபிஷேக பத்ததி

கதிசந பதபத்ம ஸ்பர்ச ஸௌக்யம் த்யஜந்தீ வ்ரதம் அதுலம் அதா: த்வம் வத்ஸராந் ஸாவதாநா ரகுபதி பதரக்ஷே ராக்ஷஸை: த்ராஸிதாநாம் ரணரணக விமுக்தம் யேந ராஜ்யம் ஸுராணாம்.

ரகுகுலத்தின் நாயகனான இராமனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! இராமனுடைய திருவடிகளின் சுகத்தை நீ எப்போதும் அனுபவித்து வந்தாய். ஆயினும் நாட்டிற்காக அந்தச் சுகத்தை ஒதுக்கி விரதம் மேற்கொண்டாய். இது நாள் வரை அசுரர்களால் அச்சம் கொண்டு விளங்கிய தேவர்களின் உலகம், உனது விரதம் காரணமாகத் தனது துக்கம் நீங்கி நின்றது.