Sri Paduka Sahasram - Paththati 7 - அபிஷேக பத்ததி (ச்லோகம் 207)

Paththati 7 - அபிஷேக பத்ததி

திவிஷத் அநுவிதேயம் தேவி ராஜ்ய அபிஷேகம் பரத இவ யதி த்வம் பாதுகே நாந்வமம்ஸ்த்தா: கதம் இவ ரகுவீர: கல்பயேத் அல்பயத்ந: த்ரிசதுர சரபாதை: தாத்ருசம் தேவகார்யம்

பாதுகாதேவியே! அனைத்து தேவர்களாலும் கொண்டாடப்பட்ட பட்டாபிஷேகத்தை நீ பரதன் போன்று ஏற்றுக் கொள்ளாமல் இருந்தாய் என்று வைத்துக் கொள்வோம். அப்படி என்றால் தேவர்களுக்காக இராமன், மூன்று நான்கு அம்புகள் மூலமே இராவணனை எந்தவிதமான சிரமமும் இன்றி வதம் செய்ததை எவ்விதம் முடித்திருக்க இயலும் (பாதுகை அரசப் பொறுப்பை ஏற்ற நிம்மதி காரணமாக அல்லவா இராமன் நாட்டைப் பற்றிக் கவலைப்படாமல் சென்றான்?)?