Sri Paduka Sahasram - Paththati 7 - அபிஷேக பத்ததி (ச்லோகம் 206)
Paththati 7 - அபிஷேக பத்ததி
ஸமுசிதம் அபிஷேகம் பாதுகே ப்ராப்நுவத்யாம் த்வயி விநிபதிதாநாம் தேவி தீர்த்த உதகாநாம் த்வநி: அநுகத மந்திர: ஸீததாம் கோஸலாநாம் சமயிதும் அலம் ஆஸீத் ஸங்குலாந் ஆர்த்தநாதாந்
பாதுகை தேவியே! இராமன் கானகம் சென்ற பின்னர் அயோத்தி எங்கும் மக்களின் புலம்பல் ஒலியே கேட்டபடி இருந்தது. ஆயினும் உனக்குப் பட்டாபிஷேகம் செய்விக்கப்பட்ட நேரத்தில், உன் மீது சேர்க்கப்பட்ட நீரின் ஓசையாலும், அப்போது ஓதப்பட்ட மந்திரங்களின் ஒலியாலும் மக்களின் புலம்பல் நீக்கப்பட்டது.