Sri Paduka Sahasram - Paththati 7 - அபிஷேக பத்ததி (ச்லோகம் 205)
Paththati 7 - அபிஷேக பத்ததி
அவஸித ரிபுசப்தாந் அந்வபூ: த்வம் ததாநீம் ரகுபதி பதரக்ஷே லப்த்த ராஜ்ய அபிஷேகா சலித புஜலதாநாம் சாமரக்ராஹிணீநாம் மணிவலய நிநாதை: மேதுராந் மந்த்ரகோஷாந்
இராமனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! உனக்குப் புண்ணிய தீர்த்தம் கொண்டு பட்டாபிஷேகம் செய்விக்கப்பட்டபோது நிகழ்ந்தது என்ன? காற்றில் கொடிகள் அசைவது போன்று, சாமரம் வீசிக் கொண்டிருந்த பெண்களின் கைகள் மெள்ள அசைந்தன. அவர்கள் கைகளில் இருந்த இரத்தின வளையல்களின் ஒலி எங்கும் ஒலித்தது. மேலும், அங்கு வேத மந்திரங்களின் ஒலியும் சூழ்ந்திருந்தது. இதனால் அந்த இட்த்தி “சத்துரு” என்ற சொல், எங்கும் கேட்காமல் விளங்கியது. இதனை நீ மகிழ்வுடன் அனுபவித்தாய்.