Sri Paduka Sahasram - Paththati 7 - அபிஷேக பத்ததி (ச்லோகம் 204)
Paththati 7 - அபிஷேக பத்ததி
தவ விதிவத் உபாதே ஸார்வபௌம அபிஷேகே பரத ஸமயவித்பி: பாதுகே மந்த்ரி முக்யை: த்வதவதி நிஜகர்மஸ்த்தாயிநீநாம் ப்ரஜாநாம் ப்ரதமயுக விசேஷா: ப்ராதுராஸந் விசித்ரா:
பாதுகையே! பரதனின் வேண்டுகோளுக்கு ஏற்றபடி அனைத்து மந்திரிகளும் இணைந்து, சாஸ்திர முறைப்படி உனக்குப் பட்டாபிஷேகம் நடத்தி வைத்தனர். அப்போது அந்த நாட்டு மக்கள் யாவரும் ஒன்று கூடி, தங்கள் செயல்கள் அனைத்தையும் உனக்கு அர்ப்பணித்தபடி நின்றனர். இதனைக் காணும்போது அந்த யுகம் (த்ரேதாயுகம்) பல யுகங்களுக்கு முன்னாலிருந்த க்ருதயுகம் போன்று விளங்கியது (நாம் நல்ல செயல்கள் செய்துவிட்டு, ”கிருஷ்ணார்ப்பணம்” என்பது போன்று இங்கு ”பாதுகா அர்ப்பணம்” என்றனர்).