Sri Paduka Sahasram - Paththati 7 - அபிஷேக பத்ததி (ச்லோகம் 203)
Paththati 7 - அபிஷேக பத்ததி
திநகரகுலஜாநாம் தேவி ப்ருத்வீபதீநாம் நிருபதிம் அதிகாரம் ப்ராப்நுவத்யாம் பவத்யாம் அஜநிஷத ஸமஸ்தா: பாதுகே தாவகீந: ஸ்நபந ஸலில யோகாந் நிம்நகா: துங்கபத்ரா:
பாதுகையே! சூரிய குலத்தில் வந்த அரசர்களுக்கே உரித்தான அதிகாரத்தை நீ அடைந்தாய். அப்போது உன் மீது சேர்க்கப்பட்ட புண்ணிய நீரின் தொடர்பு காரணமாக அனைத்து ஆறுகளும் உயர்ந்தன. வற்றிக் கிடந்த ஆறுகள் கூட, துங்கபத்திரை நதி போன்று பெருக்கெடுத்து, உலகிற்கு நன்மை ஏற்படுத்தும்படி ஆயின.