Sri Paduka Sahasram - Paththati 7 - அபிஷேக பத்ததி (ச்லோகம் 202)

Paththati 7 - அபிஷேக பத்ததி

அலகுபி: அபிஷேக வ்யாப்ருதை: அம்புபி: தே திநகரகுல தைந்யம் பாதுகே க்ஷாளயிஷ்யந் ஸ கலு கமலயோநே: ஸூநுராதத்த மந்த்ரேஷு அதிக நியம யோகாம் சக்திம் ஆதர்வணேஷு.

பாதுகையே! உனது பட்டாபிஷேகத்தில் சேர்க்கப்பட்ட புண்ணிய நீர் அனைத்தும் மிகுந்த பெருமை அடைந்தன. இவற்றை ப்ரம்மனின் புத்திரரான வசிஷ்டர் என்ன செய்தார்? இராமன் நாட்டை விட்டு அகன்றதால் சூரிய குலத்திற்குப் பெரும் துன்பம் ஏற்பட்டது. இந்த அழுக்கை, அந்தப் புண்ணிய நீர் கொண்டு அவர் விலக்கினார். இதன் மூலம் அதர்வண வேதங்களில் கூறப்பட்ட மந்திரங்கள் அனைத்தையும் ஓதி, மிகவும் அதிகமான சக்தி ஏற்படுத்தினார்.