Sri Paduka Sahasram - Paththati 7 - அபிஷேக பத்ததி (ச்லோகம் 201)

Paththati 7 - அபிஷேக பத்ததி

பாதபாத் உபஹ்ருதா ரகூத்வஹாத் ஆலவாலமிவ பீடம் ஆச்ரிதா அப்யஷேசி பவதீ தபோதநை: பாரிஜாதலதிகேவ பாதுகே.

பாதுகையே! இராமன் என்ற பெரிய மரத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட கற்பகக் கொடி போன்று நீ உள்ளாய். உன்னை ஸிம்ஹாஸனத்தில் அமர்த்தி உயர்ந்த ரிஷிகள் பட்டாபிஷேகம் செய்வித்தனர்.