Sri Paduka Sahasram - Paththati 7 - அபிஷேக பத்ததி (ச்லோகம் 200)
Paththati 7 - அபிஷேக பத்ததி
மநுவம்ச புரோஹிதேந மந்த்ரை: அபிமந்தரய த்வயி பாதுகே ப்ரயுக்தம் அபிஷேக ஜலம் க்ஷணேந ராஜ்ஞாம் சமயாமாஸ ஸமுத்திதாந் ப்ரதாபாந்.
பாதுகையே! மனுவம்சத்தின் குலகுருவான வசிஷ்டர் உன் மீது மந்திரங்கள் கொண்டு ஜபிக்கப்பட்ட புண்ணிய நீரை, பட்டாபிஷேகத்தின்போது சேர்த்தார். இந்த நீர் செய்தது என்ன? விரோதிகளான அனைவருடைய வீரம் என்ற தீயை அணைத்துவிட்டது.