Sri Paduka Sahasram - Paththati 7 - அபிஷேக பத்ததி (ச்லோகம் 199)
Paththati 7 - அபிஷேக பத்ததி
வ்ருத்தே யதாவத் அபிஷேக விதௌ பபாஸே பச்சாத் தவ அம்ப பரதேந த்ருத: க்ரீட: ஆகஸ்மிக ஸ்வகுல விப்லவ சாந்தி ஹர்ஷாத் ப்ராப்த: த்விஷாம் இவ பதி மணிபாதுகே த்வாம்.
இராமனின் திருவடிகளை, அவனது தாய் போன்று பாதுகாக்கும் பாதுகையே! உனதுப் பட்டாபிஷேகம் என்பது பரதனால் மிகவும் நேர்த்தியாக நடத்தபட்டு, உனக்கு அழகான க்ரீடம் சூட்டப்பட்டது. இராமன் கானகம் சென்றதால் சூரிய வம்சத்திற்கு திடீரென்று துன்பம் ஏற்பட்டது. இத்தகைய துயரம் உன்னால் நீங்கியது. ஆக உன்னைக் காணும்போது சூரியன் வந்தது போன்றே இருந்தது.