Sri Paduka Sahasram - Paththati 7 - அபிஷேக பத்ததி (ச்லோகம் 198)
Paththati 7 - அபிஷேக பத்ததி
ப்ராயோ விசோஷிதரஸா பதிவிப்ரயோகாத் பர்யாகுலீக்ருத ஸமுத்ர பயோதரா கௌ: அம்ப! த்வதீயம் அபிஷேகபய: பிபந்தீ தேநு: பபூவ ஜகதாம் தந தான்ய தோக்த்ரீ.
தாயே! பாதுகையே! தனது கணவனான இராமன் தன்னை விட்டுப் பிரிந்ததால் பூமி என்ற பசுவிற்கு நேர்ந்தது என்ன? அதன் ஸமுத்திரங்கள் என்னும் மடிகள் கலங்கின. இதனால் மகிழ்ச்சி என்னும் பாலைச் சொரியாமல் நின்றது. அந்த நேரத்தில் உனது பட்டாபிஷேகத்தில் விடப்பட்ட புண்ணிய நீரைப் பருகியது. உடனே அனைத்து உலகங்களுக்கும் தேவையான செல்வம், தானியங்களை அள்ளி வழங்கியது.