Sri Paduka Sahasram - Paththati 7 - அபிஷேக பத்ததி (ச்லோகம் 197)
Paththati 7 - அபிஷேக பத்ததி
விப்ரோஷிதே ரகுபதௌ பவதீ யதார்ஹம் மாந்யே பதே ஸ்த்திதிமதீ மநுவம்ச ஜாநாம் ஆத்மநி அதர்வ நிபூணை: ப்ரஹிதை: ப்ரஜாநாம் அச்ரூணி அபாஸ்யத் அபிஷேக ஜல ப்ரவாஹை:
பாதுகையே! இராமன் கானகம் சென்ற பின்னர் நீ செய்தது என்ன? மனு குலத்தில் வந்த அரசர்களின் போற்றத் தகுந்த உயர்ந்த ஸிம்ஹாஸனத்தில் நீ அமர்ந்தாய். உனது பெருமைக்கு ஏற்றபடி நீ வீற்றிருந்தாய். அதர்வண வேதத்தில் சிறந்தவர்களால் உன் மீது புண்ணிய நீர் சேர்க்கப்பட்டது. அந்த நீர்வெள்ளம் மூலம், நீ இந்த உலகில் உள்ளவர்களின் கண்களில் வரும் நீரைப் போக்கினாய்.