Sri Paduka Sahasram - Paththati 7 - அபிஷேக பத்ததி (ச்லோகம் 196)
Paththati 7 - அபிஷேக பத்ததி
ஆவர்ஜிதம் முநிகணேந ஜகத்விபூத்யை தோயம் பதாவநி ததா த்வயி மந்த்ரபூதம் மூலாவஸே கஸலிலம் நிகம த்ருமாணாம் சாபோதகம் ச ஸமபூத் க்ஷணதாசராணாம்.
பாதுகையே! இந்த உலகத்தின் ஐச்வர்யத்தின் பொருட்டு முனிவர்கள் உன் மீது புண்ணிய நீரைச் சேர்த்தனர். அப்படிப்பட்ட நீரானது, வேதம் என்ற மரம் வளர அவற்றின் வேர்களில் சேர்க்கப்பட்டதாகியது. மேலும் அந்த நீர், அசுரர்களுக்குச் சாபம் அளிக்க முனிவர்கள் தங்கள் கமண்டலங்களில் இருந்து தெளித்தது போன்றதாகிறது.