Sri Paduka Sahasram - Paththati 7 - அபிஷேக பத்ததி (ச்லோகம் 195)
Paththati 7 - அபிஷேக பத்ததி
மாலிந்யம் ஆச்ரிதவதீ மணிபாதரக்ஷே பங்கேந கேகயஸுதா கலஹ உத்திதேந சுத்திம் பராம் அதிஜகாம வஸுந்தரேயம் த்வத்த: க்ஷணாந் நிபதிதை: அபிஷேகதோயை:
இரத்தினக்கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! கேகய நாட்டு மன்னனின் மகளான கைகேயி செய்த கலகம் காரணமாக, இந்த உலகம் பாவம் என்ற அழுக்கை (துக்கம்) அடைந்துவிட்டது. ஆனால் உனக்கு பட்டாபிஷேகம் செய்விக்கப்பட்டபோது விழுந்த புண்ணிய நீரால் இந்தப் பூமி கழுவப்பட்டு, உயர்ந்த மகிழ்வை அடைந்து விட்டது.