Sri Paduka Sahasram - Paththati 7 - அபிஷேக பத்ததி (ச்லோகம் 194)
Paththati 7 - அபிஷேக பத்ததி
அஹ்நாய ராமவிரஹாத் பரிகிந்ந வ்ருத்தே: ஆச்வாஸநாய பவதீ மணிபாதரக்ஷே தீர்த்த அபிஷேகம் அபதிச்ய வஸுந்தராயா: சக்ரே ததா ஸமுசிதம் சிசிரோபசாரம்.
இரத்தினக்கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! இராமனுடைய பிரிவைத் தாங்க இயலாமல் இந்தப் பூமி மிகவும் வருந்தியபடி இருந்தது. அப்போது நீ செய்தது என்ன? பூமியைச் சமாதானம் செய்வதற்காகப் பட்டாபிஷேகம் என்பதன் மூலம், புண்ணிய தீர்த்தங்களை, இந்தப் பூமி மீது விழும்படிச் செய்தாய். குளிர்ந்த அவை மூலம், பூமியின் வருத்தம் நீக்கினாய்.