Sri Paduka Sahasram - Paththati 7 - அபிஷேக பத்ததி (ச்லோகம் 193)

Paththati 7 - அபிஷேக பத்ததி

ஹஸ்தாபசேய புருஷார்த்த பல ப்ரஸூதே: மூலம் பதாவநி முகுந்த மஹீருஹ: த்வம் சாயா விசேஷம் அதிமசத் யத் அஸௌ ப்ரஜாநாம் ஆவர்ஜிதை: த்வயி சுபை: அபிஷேகதோயை:

பெரியபெருமாளின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் என்ற நான்கு பழங்களும் பெரியபெருமாள் என்ற வ்ருக்ஷத்தில் (மரம்) கனிந்துள்ளன. இந்த மரத்தின் வேராக நீயே உள்ளாய். உன் மீது சேர்க்கப்பட்ட பட்டாபிஷேகத்தின் தூய நீரால் அல்லவா இந்த மரம் இவ்விதம் வளர்ந்து, மக்களுக்கு நல்ல நிழல் அளித்தபடி உள்ளது?