Sri Paduka Sahasram - Paththati 7 - அபிஷேக பத்ததி (ச்லோகம் 192)
Paththati 7 - அபிஷேக பத்ததி
ஸ்நேஹேந தேவி பவதீம் விஷயே அபிஷிஞ்சந் த்விஸ்ஸப்தஸங்க்ய புவநோதர தீபரேகாம் ஜாதம் ரகூத்வஹ திவாகர விப்ரயோகாத் அந்தம் தமிஸ்ரம் அஹரத் பரத: ப்ரஜாநாம்.
பாதுகாதேவியே! அனைத்து உலகங்களுக்கும் நடுவே, அவற்றுக்கு ஒளி அளிக்கும் விளக்கு போன்று நீ உள்ளாய். இப்படியாக உள்ள உனக்கு, பரதன் தனது அன்பு என்னும் எண்ணெய் கொண்டு, அயோத்தி என்னும் திரியிட்டு, பட்டாபிஷேகம் என்ற விளக்கு ஏற்றி வைத்தான். இதன் மூலம் இராமன் என்ற சூரியன் அகன்றதால் சூழ்ந்த இருள் என்னும் பிரிவை அந்நாட்டு மக்கள் அறியாமல் இருக்கச் செய்தான்.