Sri Paduka Sahasram - Paththati 7 - அபிஷேக பத்ததி (ச்லோகம் 191)

Paththati 7 - அபிஷேக பத்ததி

அத்யாஸிதம் மநுமுகை: க்ரமசோ நரேந்த்ரை: ஆரோப்ய தேவீ பவதீம் தபநீய பீடம் ராஜ்ய அபிஷேகம் அநகம் மணிபாதரக்ஷே ராம உசிதம் தவ வசம் பரத: விதேநே.

இரத்தினக்கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! மனு முதலான அரசர்கள் வரிசையாக அமர்ந்து ஆட்சி செய்த தங்க ஸிம்ஹாசனத்தில், உன்னைப் பரதன் அமர வைத்தான். இராமனுக்குச் செய்ய வேண்டிய பட்டாபிக்ஷேகத்தை, அதே போன்ற முறையில் எந்தவிதமான குறைவும் இன்றி உனக்குச் செய்தான்.