Sri Paduka Sahasram - Paththati 7 - அபிஷேக பத்ததி (ச்லோகம் 190)
Paththati 7 - அபிஷேக பத்ததி
தசாநநாதீந் மணிபாதரக்ஷே ஜிகீஷதோ தாசரதே: வியோகாத் ஜாதோபதாபா த்வயி ஸம்ப்ரயுக்தை: தீர்த்தோதகை: உச்ச்வஸிதா தரித்ரீ.
இரத்தினக்கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! இராமனால் ஆளப்படவேண்டும் என்ற ஆவல் பூமிக்கு இருந்தது. ஆனால், இராமன் இராவணனை வெல்லவேண்டும் என்ற ஆவல் மேலிட கானகம் சென்றான். இதனால் வருத்தம் கொண்ட பூமியானது, உன் மீது பட்டாபிஷேகத்தின்போது சேர்க்கப்பட்ட புண்ணிய நீர் தன் மீது விழுந்தவுடன் சமாதானம் அடைந்தது.