Sri Paduka Sahasram - Paththati 7 - அபிஷேக பத்ததி (ச்லோகம் 189)

Paththati 7 - அபிஷேக பத்ததி

ப்ராப்த அபிஷேகா மணிபாதரக்ஷே ப்ரதாபம் உக்ரம் ப்ரதிபத்யமாநா சசாஸ ப்ருத்வீம் பவதீ யதாவத் ஸாகேத ஸிம்ஹாஸந ஸார்வபௌமீ.

இரத்தினக்கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! நீ பட்டாபிஷேகம் செய்விக்கப்பட்டு, அயோத்தியின் ஸிம்ஹாசனத்தில் அமர்ந்தாய். மிகவும் கடுமையான பராக்ரமம் அடைந்தாய். எந்தவிதமான குறைவும் இன்றி இந்தப் பூமியைச் சரியான முறையில் காப்பாற்றினாய்.