Sri Paduka Sahasram - Paththati 7 - அபிஷேக பத்ததி (ச்லோகம் 188)
Paththati 7 - அபிஷேக பத்ததி
ரக்ஷோவதார்த்தம் மணிபாதரக்ஷே ராமாத்மந: ரங்கபதே: ப்ரவாஸே ரக்ஷோபகாராத் பவதீ விதேநே ராஜந்வதீம் கோஸல ராஜதாநீம்.
இரத்தினக்கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! அரக்கர்களை வதம் செய்வதற்காகவே ஸ்ரீரங்கநாதன் இராமனாக திருஅவதாரம் செய்தான். அவன் தண்டகாரண்ய வனம் சென்றான். அப்போது நீ கோஸல நாட்டைக் காக்க முடிவெடுத்தாய். அதனால் கானகத்தை விட்டு அயோத்திக்கு வந்த நீ, அந்த நாட்டை நல்ல ஓர் அரசன் உடையதாகச் செய்தாய்.