Sri Paduka Sahasram - Paththati 7 - அபிஷேக பத்ததி (ச்லோகம் 187)
Paththati 7 - அபிஷேக பத்ததி
வசிஷ்ட முக்யை: விஹித அபிஷேகாம் ராஜ்யாஸநே ராம நிவேச யோக்யே துஷ்டாவ ரங்கேச்வர பாதரக்ஷே ப்ராசேதஸ: த்வாம் ப்ரதம: கவீநாம்
ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைப் பாதுகாக்கும் பாதுகையே! இராமன் எழுந்தருள வேண்டிய ஸிம்ஹாசனத்தில் வசிஷ்டர் போன்றவர்கள் உன்னை அமர்த்தி, உனக்குப் பட்டாபிஷேகம் செய்து வைத்தனர். உன்னைத் துதிப்பவர்களில் முதன்மையான வால்மீகி முனிவர், இவ்விதம் நீ அமர்ந்தவுடன், உன்னைத் துதித்து நின்றார்.