Sri Paduka Sahasram - Paththati 7 - அபிஷேக பத்ததி (ச்லோகம் 186)

Paththati 7 - அபிஷேக பத்ததி

க்ருத அபிஷேகா பவதீ யதாவத் ரங்கேச பாதாவநி ரத்நபீடே கங்கா நிபாத ஸ்நபிதாம் ஸுமேரோ: அதித்யகாபூமிம் அதச்சகார.

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! இரத்தினக் கற்களால் இழைக்கப்பட்ட ஸிம்ஹாசனத்தில் உன்னை எழுந்தருளச் செய்து, சாஸ்திர முறைப்படி பட்டாபிஷேகம் செய்விக்கப்பட்டாய். அப்போது உன் மீது புனித நீர் சேர்க்கப்பட்டது. இதனைக் காணும்போது மேரு மலையை விட நீ உயர்ந்தும், உன் மீது விடப்பட்ட நீர், கங்கையை விடப் புனிதமானதாகவும் தோன்றியது.