Sri Paduka Sahasram - Paththati 7 - அபிஷேக பத்ததி (ச்லோகம் 185)
Paththati 7 - அபிஷேக பத்ததி
நிவேச்ய ரங்கேச்வர பாதரக்ஷே பத்ராஸநே ஸாதரம் அப்யஷிஞ்சத் வசீ வஸிஷ்ட்ட: மனு வம்ச ஜாநாம் மஹீக்ஷிதாம் வம்ச புரோஹித: த்வாம்.
ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! மனுவம்சத்தில் வந்த அனைத்து அரசர்களுக்கும் குருவாக உள்ளவரும், இந்த்ரியங்களை வென்றவரும் ஆகிய வசிஷ்ட்டர் செய்தது என்ன? உன்னை ஸிம்ஹாசனத்தில் எழுந்தருளச் செய்து, மிகவும் ஆசையாக உனக்குப் பட்டாபிஷேகம் செய்து வைத்தார்.