Sri Paduka Sahasram - Paththati 7 - அபிஷேக பத்ததி (ச்லோகம் 184)

Paththati 7 - அபிஷேக பத்ததி

ப்ராது: நியோகே அபி அநிவர்த்தமாநம் ராஜ்ய அபிஷேகம் ச பரித்யஜந்தம் ராமாநுஜௌ தௌ நநு பாரதந்த்ர்யாத் உபௌ உபாப்யாம் பவதீ ஜிகாய.

பாதுகையே! இராமனின் ஆணைகளை அவனது தம்பிகளான இலட்சுமணனும், பரதனும் மீறாதவர்களே ஆவார்கள். ஆயினும் இராமனின் ஆணைக்கு ஏற்ப அவர்கள் இருவரும் பட்டாபிஷேகம் ஏற்கவில்லை. ஆனால், நீ ஏற்றுக் கொண்டாய். இதன் மூலம் அவர்கள் இருவரையும் நீ வென்றாய்.