Sri Paduka Sahasram - Paththati 7 - அபிஷேக பத்ததி (ச்லோகம் 183)

Paththati 7 - அபிஷேக பத்ததி

மூர்த்தாபிஷிக்தை: நியமேந வாஹ்யௌ விசிந்த்ய நூநம் ரகுநாத பாதௌ ரத்ன ஆஸநஸ்த்தாம் மணிபாதுகே த்வாம் ராமாநுஜந்மா பரத: அப்யஷிஞ்சத்.

இரத்தினக்கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! இராமனின் தம்பியான பரதன் எண்ணியது என்ன? தகுந்த பட்டாபிஷேகம் செய்யப்பட்ட ஒருவர் மட்டுமே இராமனின் திருவடிகளைச் சுமந்து, அதன் தொடர்பு பெற இயலும் என்பதாகும். இதன் காரணமாகவே மாணிக்கக்கற்கள் இழைக்கப்பட்ட ஸிம்ஹாசனத்தில் உன்னை அமர வைத்து, உனக்குப் பட்டாபிஷேகம் செய்து வைத்தான் போலும்.