Sri Paduka Sahasram - Paththati 7 - அபிஷேக பத்ததி (ச்லோகம் 182)

Paththati 7 - அபிஷேக பத்ததி

ராகவஸ்ய சரணௌ பதாவநி ப்ரேக்ஷிதும் த்வத் அபிஷேகம் ஈஷது: ஆபிஷேசநிக பாண்ட ஸந்நிதௌ யத் ப்ரதக்ஷிணகதி: சநை: யயௌ.

பாதுகையே! இவ்விதமாகப் பட்டாபிஷேகத்திற்காக வைக்கப்பட்டிருந்த பொருள்களை இராமன் மெதுவாக வலம் வந்தான். ஏன்? அவனுடைய திருவடிகள் உனது பட்டாபிஷேகத்தைக் காண மிகவும் ஆவல் கொண்டன. ஆகவே அவனது திருவடிகள், உனது பட்டாபிஷேகம் வரை காலதாமதம் செய்யவே மெதுவாக நடந்தன போலும்.