Sri Paduka Sahasram - Paththati 7 - அபிஷேக பத்ததி (ச்லோகம் 181)
Paththati 7 - அபிஷேக பத்ததி
பாஹி ந: பாதுகே யஸ்யா விதாஸ்யந் அபிஷேசநம் ஆபிஷேசநிகம் பாண்டம் சக்ரே ராம: ப்ரதக்ஷிணம்.
பாதுகையே! இராமன் கானகம் புகுதற்கு முன்பாக, தனது பட்டாபிஷேகத்திற்காக வைக்கப்பட்டிருந்த பொருள்களை ஒருமுறை வலமாக வந்து பார்வை இட்டான். இதன் மூலம் உனக்கு அப்போதே இராமானால் பட்டாபிஷேகம் நடத்தப்பட்டுவிட்டது. இப்படிப்பட்ட பாதுகையே! எங்களைக் காக்கவேண்டும்.