Sri Paduka Sahasram - Paththati 6 - அதிகார பரிக்ரஹ பத்ததி (ச்லோகம் 180)
Paththati 6 - அதிகார பரிக்ரஹ பத்ததி
ப்ராப்த உதயா ததாநீம் கிம் அபி தம: தத் நிராகரோத் பவதீ தநுரிவ மனுகுல ஜநுஷாம் ப்ரஸவித்ரீ ரத்நபாதுகே ஸவிது:
இரத்தினக் கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! இராமன் கானகம் புகுந்தபோது நீ அரசபதவி ஏற்கும் உதயம் என்பதை அடைந்தாய். ஆக மநுகுலத்தின் அரசர்களுக்கு ஆதாரமாக உள்ள சூரியன் போன்று நீ ஆனாய். இதன் மூலம் எங்கும் உள்ள இருளை நீக்கினாய்.