Sri Paduka Sahasram - Paththati 6 - அதிகார பரிக்ரஹ பத்ததி (ச்லோகம் 179)
Paththati 6 - அதிகார பரிக்ரஹ பத்ததி
பரிஹ்ருத தண்டகாத்வ கமநம் பதரக்ஷிணி தத் பரிணத விச்வ ஸம்பத் உதயம் யுவயோ: த்விதயம் ரகுபதி ரத்னபீடம் அதிருஹ்ய ததா விததே வ்யபகத வைரிபூப நிலயம் வஸுதாவலயம்
பெரியபெருமாளின் திருவடிகளைப் பாதுகாக்கும் பாதுகையே! இராமன் தண்டகாரண்ய வனத்திற்கு வந்தபோது, நீங்கள் இருவரும் (இரு பாதுகைகள் – ஒரு ஜோடி) அவனுடன் சஞ்சாரம் செய்யாமல் அயோத்திக்குத் திரும்பினீர்கள். இராமனின் கற்கள் இழைத்த சிம்மாசனத்தில் அமர்ந்த நீங்கள் இருவரும், அனைத்து உலகங்களையும் விருத்தி அடையும்படிச் செய்தீர்கள்.