Sri Paduka Sahasram - Paththati 6 - அதிகார பரிக்ரஹ பத்ததி (ச்லோகம் 178)
Paththati 6 - அதிகார பரிக்ரஹ பத்ததி
அநிதரவஹநீயம் மந்த்ரி முக்யை: யதா தத் த்வயி விநிஹிதம் ஆஸீத் சூர்ய வம்சாதி ராஜ்யம் ரகுபதி பதரக்ஷே ரத்நபீடே ததாநீம் ச்ரியம் இவ தத்ருசு: த்வாம் ஸாதரம் லோகபாலா:
இராமனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! இராமன் கானகம் புகுந்த பின்னர் அயோத்தியை அந்நாட்டு உயர்ந்த மந்திரிகளால் கூட ஆள முடியவில்லை. யாராலும் சுமக்க இயலாத ராஜ்யபாரத்தை உன்னிடம் வைத்தனர். சூரிய வம்சத்தின் அரச சிம்மாசனத்தில் நீ அமர்ந்தபோது தேவர்களும் அரசர்களும், இரத்தினக் கற்களால் இழைக்கப்பட்ட சிம்மாசனத்தில் நீ அமர்ந்ததைக் கண்டு மகிழ்ந்தனர். மஹாலக்ஷ்மி திருப்பாற்கடலில் உதித்தபோது அவளைப் போற்றியது போன்று, உன்னைப் போற்றி நின்றனர்.