Sri Paduka Sahasram - Paththati 6 - அதிகார பரிக்ரஹ பத்ததி (ச்லோகம் 177)
Paththati 6 - அதிகார பரிக்ரஹ பத்ததி
மகத அங்க களிங்க வங்க முக்யாந் விமதாந் ரந்த்ரகவேஷிண: ஸஸைந்யாந் ரகுபுங்கவ பாதுகே விஜிக்யே பரத: சாஸநம் உத்வஹந் பவத்யா:
இராமனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! இராமன் கானகம் புகுந்தவுடன் அயோத்தியைக் கைப்பற்ற மகதம், அங்கம், போன்ற நாட்டின் அரசர்கள் முனைந்தனர். அப்போது சிம்மாசனம் அமர்ந்த உனது ஆணை மூலமாக அவர்களைப் பரதன் தனது படைகளுடன் சென்று வென்றான்.