Sri Paduka Sahasram - Paththati 6 - அதிகார பரிக்ரஹ பத்ததி (ச்லோகம் 176)

Paththati 6 - அதிகார பரிக்ரஹ பத்ததி

மநுஜத்வ திரோஹிதேந சக்யே வபுஷா ஏகேந விரோதிநாம் நிராஸே அபஜத் பரதாதி பேதம் ஈச: ஸ்வயம் ஆராதயிதும் பதாவநி த்வாம்

திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! மனிதனாகப் பிறந்து, ஒரே உடல் எடுத்து மட்டுமே இராவணன் போன்றோரை இராமன் வதம் செய்வது இயலும். ஆயினும் ஏன் பரதன் போன்று பல உடல்கள் எடுத்துத் தோன்றினான்? ஸ்ரீரங்கநாதனின் பாதுகையான உன்னை ஆராதிக்க அல்லவா இவ்விதம் பகவான் தோன்றினான் (பகவானே பாதுகையை ஆராதித்தான் என்று கருத்து. எப்படி? தனது பக்தையான பாதுகையை, தானே ஆராதித்துக் கொண்டாடினான்)?