Sri Paduka Sahasram - Paththati 6 - அதிகார பரிக்ரஹ பத்ததி (ச்லோகம் 175)

Paththati 6 - அதிகார பரிக்ரஹ பத்ததி

புருஷார்த்த சதுஷ்டயார்த்தீநாம் பரிஷத் தே மஹிநா வஸிஷ்டமுக்யை: க்ரய விக்ரய பட்டணம் ப்ரஜாநாம் அபவத் காஞ்சந பாதுகே ததாநீம்

பொன்மயமான பாதுகையே! நீ சிம்மாசனத்தில் அமர்ந்தபோது உனது அரச சபையானது வசிஷ்டர் முதலான பல மஹரிஷிகளால் பெரிதும் போற்றப்பட்டது. தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் ஆகிய நான்கு பலன்களையும் விரும்பும் மக்கள், அவை மிகவும் எளிதாக உனது சபையில் கிட்டியது என்று வந்தனர். இதனால் உனது சபை வியாபார ஸ்தலம் போன்று காணப்பட்டது.