Sri Paduka Sahasram - Paththati 6 - அதிகார பரிக்ரஹ பத்ததி (ச்லோகம் 174)

Paththati 6 - அதிகார பரிக்ரஹ பத்ததி

ரகுவீர பதாநுஷங்கமாத்ராத் பரிபர்ஹேஷு நிவேசிதா யதி த்வம் அதிகாரதிநே கதம் புந: தே பரிவாரா: தவ பாதுகே பபூவு:

பாதுகையே! இராமனுடைய திருவடித் தொடர்பு உனக்குக் கிட்டியது. இதனால் உன்னை அவனுடைய குடை, சாமரம் போன்று பொருள்களுடன் ஒப்பிட இயலாது. இவ்விதம் ஒப்பிடலாம் என்றால், நீ சிம்மாசனம் அமர்ந்தபோது அந்தக் குடை, சாமரம் போன்றவை உனக்கு ஏவல் செய்யும் பொருள்களாக எவ்விதம் வந்தன?