Sri Paduka Sahasram - Paththati 6 - அதிகார பரிக்ரஹ பத்ததி (ச்லோகம் 173)

Paththati 6 - அதிகார பரிக்ரஹ பத்ததி

பாதுகே ரகுபதௌ யத்ருச்சயா ப்ரஸ்திதே வனவிஹார கௌதுகாத் ஆதி ராஜ்யம் அதிகம்ய தே யுவாம் அக்ஷதம் வஸுமதீம் அரக்ஷதம்

ஏ பாதுகே! இராமன் எந்தவிதமான முன்னேற்பாடும் இல்லாமல், காட்டில் வாசம் செய்யும் மகிழ்வு கொண்டு புறப்பட்டான். அந்த நேரத்தில் நீயும் பரதனும் அயோத்தியை அடைந்து, இந்தப் பூமிக்கு எந்தவிதமான குறையும் இன்றி பார்த்துக் கொண்டீர்கள்.