Sri Paduka Sahasram - Paththati 6 - அதிகார பரிக்ரஹ பத்ததி (ச்லோகம் 172)
Paththati 6 - அதிகார பரிக்ரஹ பத்ததி
அநிச்சத: பாண்டரம் ஆதபத்ரம் பித்ரா விதீர்ணம் மணிபாதரக்ஷே ஆஸீத் த்வத் அர்த்தம் வித்ருதேந தேந சாயா ஸமக்ரா பரதஸ்ய மௌளௌ
இரத்தினக் கற்களால் இழைக்கப்பட்ட பாதுகையே! தனது தந்தையான தசரதன் தனக்கு அளித்த வெண்மையான குடையை பரதன் மறுத்தான். ஆயினும் உனக்காக அவன் அந்த வெண்கொற்றக் குடையைப் பிடித்தபடி உள்ளான். அந்தக் குடையின் நிழல் அவன் தலை மீது அழகாக விழுந்தபடி உள்ளது.