Sri Paduka Sahasram - Paththati 6 - அதிகார பரிக்ரஹ பத்ததி (ச்லோகம் 171)

Paththati 6 - அதிகார பரிக்ரஹ பத்ததி

மஹீஷிதாம் ராகவபாதரக்ஷே பத்ராஸநஸ்த்தாம் பவதீம் ஸ்ப்ருசந்த: பூர்வம் ததாத்வே நியதே அபி பூய: கல்யாணதாம் ஆநசிரே கிரீடா:

இராமனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! நீ சிம்மாசனத்தில் வீற்றிருந்தபோது, உன்னை அரசர்களின் தலையில் உள்ள கிரீடங்கள் (அவர்கள் உன்னை வணங்கும்போது) தொட்டன. அவை முன்பே தங்கமாக உள்ளபோதிலும், உன்னைத் தொட்ட பின்னர் மட்டுமே உயர்ந்த பலனைப் பெற்றன.