Sri Paduka Sahasram - Paththati 6 - அதிகார பரிக்ரஹ பத்ததி (ச்லோகம் 170)
Paththati 6 - அதிகார பரிக்ரஹ பத்ததி
யாவத் த்வயா ராகவ பாதரக்ஷே ஜிகீஷிதா ராக்ஷஸ ராஜதாநீ மாலேவ தாவத் லுளிதா மதாந்தை: உத்யாந சாகாம்ருக யூதபைஸ்தே
இராமனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! இரு காலகட்டங்களில் இலங்கை நகரத்தை வெல்லவேண்டும் என்று நீ விரும்பினாய். அப்போது கொழுத்த வானரவீரர்கள் மூலமாக இலங்கை நகரமானது, மலர்கள் போன்று கசக்கி வெல்லப்பட்டது (இராவணன் சீதையை அபகரித்தான் என்று அறிந்தவுடன் நீ பரதனின் சேனையை அனுப்ப எண்ணினாய். ஆனால் உனது எண்ணம் காரணமாகவே வானரவீரர்கள் அச்செயலை முடித்துவிட்டனர் என்று கருத்து).