Sri Paduka Sahasram - Paththati 6 - அதிகார பரிக்ரஹ பத்ததி (ச்லோகம் 169)
Paththati 6 - அதிகார பரிக்ரஹ பத்ததி
பத்ராஸநம் சேத் பரிவ்ருத்தம் ஆஸீத் தேவி க்ஷணம் தக்ஷிணதோமுகம் தே கதம் பவேத் காஞ்சந பாதரக்ஷே ராமஸ்ய ரக்ஷ: ம்ருகயா விஹார;
பொன்மயமான பாதுகாதேவியே! நீ உனது ஸிம்ஹாசனத்தை ஒரு நொடிப்பொழுது தெற்குத் திசை பார்த்தபடி இட்டிருந்தால் போதுமானது. இவ்வாறு நீ செய்திருந்தால் இராமன் இலங்கை சென்று அரக்கர்களை அழிப்பது என்ற லீலையே இல்லாமல் போய் இருக்கும் அல்லவா? (இராமனின் செயலை பாதுகையே செய்திருப்பாள் என்றார்).