Sri Paduka Sahasram - Paththati 6 - அதிகார பரிக்ரஹ பத்ததி (ச்லோகம் 168)
Paththati 6 - அதிகார பரிக்ரஹ பத்ததி
ராஜாஸநே சேத் பவதீ நிஷண்ணா ரங்கேச பாதாவநி தந்ந சித்ரம் யத்ர அதிரூடா: க்ரமஸ: புரா த்வாம் உத்தம்ஸயந்தே ரகுஸார்வபௌமா:
ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைப் பாதுகாக்கும் பாதுகையே! இக்ஷ்வாகு போன்ற அரசர்கள் அமர்ந்த ஸிம்ஹாசனத்தில் நீ அமர்ந்த காரணத்தில் எந்த ஒரு வியப்பும் இல்லை - காரணம், அவர்கள் உன்னைத் தங்கள் தலையில் தாங்கியபடி ஸிம்ஹாசனத்தில் அமர்ந்தனர். உன்னையே தங்கள் தலைக்கு அலங்காரமாக வைத்துக் கொண்டனர். அப்படி அவர்கள் தலையில் அமராமல் நேரடியாக ஸிம்ஹாசனத்தில் நீ அமர்வதில் என்ன வியப்பு உள்ளது?