Sri Paduka Sahasram - Paththati 6 - அதிகார பரிக்ரஹ பத்ததி (ச்லோகம் 167)
Paththati 6 - அதிகார பரிக்ரஹ பத்ததி
அரண்ய யோக்யம் பதம் அஸ்ப்ருசந்தீ ராமஸ்ய ராஜார்ஹ பதே நிவிஷ்டா ஆஸ்த்தாந நித்யாஸிகயா நிராஸ்த்த: ஸ்வர்கௌகஸாம் ஸ்வைரகதே: விகாதம்
பாதுகையே! இராமனின் திருவடிகளை நீ தொடாதவளாக, ஸிம்ஹாசனத்தில் அமர்ந்துவிட்டாய். இவ்வாறு நீ எங்கும் நகராமல் இருந்த காரணத்தினால், தேவர்களுக்கு அசுரர்களிடம் இருந்த பயம் நீங்கப்பெற்று எங்கும் சஞ்சரிக்க இயன்றது.