Sri Paduka Sahasram - Paththati 6 - அதிகார பரிக்ரஹ பத்ததி (ச்லோகம் 166)

Paththati 6 - அதிகார பரிக்ரஹ பத்ததி

அநந்ய பக்தி: மணிபாதுகே த்வாம் அபி அர்ச்சயந் தாசரதி: த்வீதீய: விகல்ப்யமாந: ப்ரதமேந கீர்த்யா வந்த்ய: ஸ்வயம் வ்யோமஸதாம் பபூவ

இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! எந்த ஒரு பயனும் எதிர்பார்க்காமல், உன்னிடம் மட்டுமே பக்தி கொண்டு, பரதன் உன்னை மட்டுமே வணங்கி நின்றான். இதனால் தசரதனின் இரண்டாவது புத்திரனான அவனை, முதல் பிள்ளையான இராமானுக்குச் சமமாகவே அனைவரும் கருதினர். இப்படியாகப் பரதன் தேவர்களுக்குச் சமமானவனாகவே வணங்கப்பட்டான்.