Sri Paduka Sahasram - Paththati 6 - அதிகார பரிக்ரஹ பத்ததி (ச்லோகம் 165)

Paththati 6 - அதிகார பரிக்ரஹ பத்ததி

அபாவ்ருத த்வாரம் அயந்த்ரிதாச்வம் ரங்கேச பாதாவநி பூர்வம் ஆஸீத் த்வயா யத்ருச்சா ஸுகஸுப்த பாந்த்தம் ராமே வநஸ்த்தே அபி பதம் ரகூணாம்

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைப் பாதுகாப்பவளே! பாதுகையே! இராமன் கானகம் புகுந்தவுடன் நீ ஸிம்ஹாஸனத்தில் அமர்ந்திருந்தபோது நிகழ்ந்தது என்ன? பகைவர்கள் யாரும் வருவது இல்லாமல் உள்ளதால் அயோத்தியின் கோட்டைக் கதவுகள் திறந்தே கிடந்தன. யானைப்படை, குதிரைப்படை ஆகியவற்றில் உள்ள யானைகளும் குதிரைகளும் கட்டி வைக்கப்படாமல், அயோத்தியின் வீதிகளில் சுற்றின. அந்த நாட்டின் அரசனான இராமன் கானகத்தில் உள்ளபோதிலும், பாதுகா இராஜ்ஜியம் காரணமாக, எந்தவிதமான கவலையும் இன்றி வழிப்போக்கர்கள் வந்து உறங்கிச் சென்றபடி நாடு இருந்தது.